பராகுவேவில் நிலவும் கடுமையான வறட்சியால் சோயா பீன்ஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான வறட்சியை சந்தித்து வருவதாக சோயா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 60 விழுக்காடு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். சோயா ஏற்றுமதியில் உலகின் நான்காவது பெரிய நாடாக பராகுவே விளங்கி வந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு வறட்சி தள்ளியுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.