இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்து வருகிறது, காசாவில் இருக்கும் மக்களை வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், காசா எல்லையில் இருந்தும் இஸ்ரேல் ராணுவத்தினரை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்து பேசினார். தரைவழி தாக்குதல் தொடர்பாக ராணுவ வீரர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் இருந்து பாலஸ்தீனிய மக்கள் யாரும் எகிப்துக்கு இடம்பெயர மாட்டார்கள் என கூறியுள்ளார். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக உலகின் பல்வேறு பகுதிகளில் பேரணி, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு பாராட்டு கூறிய இஸ்மாயில் ஹனியே, அதனை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.