“இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேல்.. உலக நாடுகளே காஸாவை காப்பாற்றுங்கள்..” கோரிக்கை வைத்த பாலஸ்தீனம்

காஸாவில் இஸ்ரேல் இன அழிப்பை தொடங்கியுள்ளதாகவும், உலக நாடுகள் காஸாவைக் காப்பாற்ற வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளது பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம்.
gaza war
gaza warfile image
Published on

இஸ்ரேலின் கோர தாக்குதலால் நாளுக்கு நாள் காஸாவில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 3,000 பிஞ்சு குழந்தைகள் உட்பட சுமார் 7,500 அப்பாவி பொதுமக்கள் இந்த போரில் பலியாகியுள்ளனர். இந்நிலையில், ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் தரைவழி தாக்குதல் என்று இஸ்ரேல் காஸா மீது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

நேற்று தீவிரமடைந்த தாக்குதலால் காஸா பகுதியில் இணைய மற்றும் தொலைதொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

gaza war
"எங்கே குண்டு போடப்போகிறார்கள்? என்ன நடக்கிறது?" - சிகப்பாக மாறிய வானம்! ரத்தக்காடாக மாறுகிறதா காஸா?

இதனால் சுகாதார ஊழியர்கள் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் வரை யாரையும் தொடர்புகொள்ள முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உலக நாடுகளுக்கு பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது. X தளத்தில் பதிவிட்ட பாலஸ்தீன வெளியுறவுத்துறை, “காஸா மீதான இஸ்ரேல் கோர தாக்குதலால், தொலைதொடர்பு, இணைய சேவை அத்தனையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தரைவழித் தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடங்க உள்ளனர். இதனால், பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டு உலக நாடுகள் அனைத்தும் இந்த விவகாரத்தில் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். காஸா பகுதி மக்கள் மீது ஒவ்வொரு நிமிடமும் இனி அழிப்பு மற்றும் படுகொலையை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தை தடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.

மறுபுறம், காஸாவில் உடனடியாக மனிதநேய போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும் என்று ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்த நிலையில், இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தீர்மானத்தின் மீது 113 நாடுகள் பேச இருந்த நிலையில், அவசரம் கருதி பாதியிலேயே வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த தீர்மானத்தில், சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதித்து, பொதுமக்களையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பாதுகாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை காஸாவிற்குள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீன குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

gaza war
''உடனடியாக போரை நிறுத்த வேண்டும்'' ஐநா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com