ரியல் சூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்படும் ’பாகிஸ்தானின் ரஜினிகாந்த்’!

ரியல் சூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்படும் ’பாகிஸ்தானின் ரஜினிகாந்த்’!
ரியல் சூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்படும் ’பாகிஸ்தானின் ரஜினிகாந்த்’!
Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்று லேசான தோற்றம் கொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 62 வயது நபரின் வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு, இந்தியா தாண்டி, ஜப்பான், சீனா, அமெரிக்கா, மலேசியா என பல நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு. 72-வது பிறந்தநாளை இன்னும் ஒன்றரை மாதங்களில் கொண்டாட உள்ள ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடித்துக் கொடுக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் போன்ற தோற்றம் கொண்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த 62 வயது நபரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ரெஹ்மத் காஷ்கோரி. 62 வயதான இவர், அங்கு தாசில்தாராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இந்நிலையில், அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்றப் பின்னர், சமூவலைதளங்களில் வேட்டையாடும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அப்போது, பலரும் இவரை ரஜினிகாந்த் போன்று இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் ‘படையப்பா’ படத்தில் வருவதுப்போன்ற மேக்கப் மற்றும் ஆக்ஷன்கள் செய்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ளப் பேட்டியில், “சிபியில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் நான் பணியாற்றிய போது, ரஜினிகாந்துடன் எனக்கு உள்ள ஒற்றுமை குறித்த கருத்துக்கள் பற்றி பேசும்போது நான் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் நான் ஓய்வுப் பெற்றப் பிறகு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்கினேன், அங்கு பலர் என்னை ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டு அந்த பெயரில் அழைக்கத் தொடங்கினர். ஒரு சிறந்த நடிகராகவும், மனிதனாகவும் உள்ள ரஜினிகாந்த் போன்று, எனக்கும் கடவுள் அந்த தோற்றமளித்துள்ளார் என்பதை உணர்ந்ததிலிருந்து அதை ஏற்றுக்கொண்டேன்.

ஒருமுறை கராச்சிக்கு நான் மருத்துவப் பரிசோதனைக்கு சென்றபோது வணிக வளாகம் ஒன்றிற்கு சென்றேன். அப்போது அங்கே உள்ளவர்கள் என்னை சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுக்கத் துவங்கி விட்டார்கள். எனது சமூகவலைத்தளத்தில், என்னுடைய புகைப்படத்திற்கு கீழே, நீங்கள் ரஜினிகாந்தா? என்று பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், சௌதி அரேபியா, ஐக்கிய அமீரகம், நேபாள் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கேட்பார்கள். அவர்களிடம் ஆமாம், நான் ரஜினிகாந்த்துதான். ஆனால் பாகிஸ்தான் ரஜினிகாந்த் என்று பதிலளிப்பேன். நான் வேட்டையாடும் ஸ்டைல் கூட ரஜினிகாந்த் மாதிரி இருப்பதாக கூறுவார்கள்.

எனக்கு தற்போது ஒரு ஆசை உண்டு. ரஜினிகாந்தை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் ஒருவர் இந்திய ரஜினிகாந்த், ஒருவர் பாகிஸ்தான் ரஜினிகாந்த் என்பதை மக்களுக்கு காட்டுவதற்காக” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com