தொலைக்காட்சி சேனல்கள் பல, விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. நேரலையாய் நடைபெறும் அந்த நிகழ்ச்சிகள் காரசாரமாய் விவாதங்கள் வைக்கப்படும். எதிரெதிர் கருத்து கொண்டவர்கள் காரசாரமாக விவாதிப்பர். சில நேரங்களில் அவை வார்த்தைப் போராக வெடித்து கைகலப்பாக மாறும் சூழலும் உருவாகும். அப்படியான ஒரு சம்பவம்தான் பாகிஸ்தான் சேனல் நடத்திய விவாத நிகழ்ச்சியின்போது நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கும், இந்து மத ஆச்சார்யா விக்ரமாதித்யாவும் பங்கேற்றனர். அப்போதுஆச்சார்யா விக்ரமாதித்யா, “நாங்கள் இந்த மாதத்தில் அனைவரையும் மனிதர்களாக மாற்றச் சொல்லித் தருகிறோம், மிருகங்களாக மாற்ற அல்ல. ஒரு மனிதன் மற்றொருவரிடம், எப்போதும் தவறாக நடக்கவே கூடாது” என்று பேசிக்கொண்டிருந்தார் . அப்போது எதிர் விவாதம் செய்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக், உடனே அவரை கோபப்படுத்த எண்ணி பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு 16,000 பேர் (மனைவிகள்) இருந்தார்கள்" என்று சொல்லி முடிக்கும் முன்னர், அவர்மீது பாய்ந்த ஆச்சார்யா விக்ரமாதித்யா கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு ஜாகிர் நாயக்கும் அவரை தாக்கினார். பின்னர் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.