பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்புக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், ஊழல் தொடர்பான வழக்கிலும் சர்க்கரை ஆலை தொடர்பான வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இவரின் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
இதனால், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சர்க்கரை ஆலை வழக்கில் ஜாமின் வழங்க வேண்டும் என்று லாகூர் நீதிமன்றத் தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாமின் வழங்கினர். எனினும் ஊழல் வழக்கில் இன்னும் ஜாமின் பெறாததால் காவல்துறையினர் கட்டுபாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.