பாகிஸ்தான் ஹைவேயில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: வெடித்த போராட்டம்

பாகிஸ்தான் ஹைவேயில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: வெடித்த போராட்டம்
பாகிஸ்தான் ஹைவேயில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: வெடித்த போராட்டம்
Published on

பாகிஸ்தான் லாகூர் ஹைவேயில் தனது குழந்தைகளுடன் நள்ளிரவு நேரத்தில் பெண் ஒருவர் காரில் பயணித்துள்ளார். 

அப்போது அவர் ஓட்டி வந்த காரில் எரிபொருள் தீர்ந்து போனதால் அவசர உதவி வேண்டி போலீசாருக்கு போன் செய்து விவரத்தை சொல்லிவிட்டு காரின் கதவுகளை அடைத்துவிட்டு காத்துக் கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த சிலர் காரின் கண்ணாடியை உடைத்து அந்த பெண்ணையும், அவரது குழந்தைகளையும் சாலையோரம் இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதோடு நின்று விடாமல் அந்த குழந்தைகளின் முன்னரே அந்த பெண்ணை பலமுறை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் பாகிஸ்தானில் மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது. 

‘குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்’ என மக்கள் போராடி வருகின்றனர்.

இதுவரை 15க்கும் மேற்ப்பட்டவர்கள் கைதாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொல்லியுள்ளார் இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி. இது மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ‘இந்த குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்து, நீதி நிலை நிறுத்தப்படும்’ என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com