பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகவேண்டுமென அந்நாட்டில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
போராட்டக்காரர்களின் பொறுமையை சோதிக்காமல் 2 நாளில் இம்ரான் கான் பதவி விலக வேண்டுமென போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் மதகுருவான மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணி முடிவில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இம்ரான் கான் அரசை கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் கலந்து பேச உள்ளதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விஷயத்திலும் பொருளாதாரத்தை காப்பதிலும் இம்ரான் கான் அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் ரஹ்மான் கூறினார். கோர்பச்சேவால் சோவியத் யூனியன் உடைந்தது போல் இம்ரான் கானால் பாகிஸ்தான் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.