பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி குரேஷி, இந்தியாவின் தாக்குதல் எச்சரிக்கைக்கு பயந்துதான், இந்திய விமானி அபிநந்தனை இம்ரான் கானின் அரசு விடுவித்ததாக கூறியுள்ளார்.
பாகிஸ்தான் சட்டமன்றத்தில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவர் அயாஸ் சாதிக் பேசுகையில், ‘’ அபிநந்தனை விடுவிக்காவிட்டால் இரவு 9 மணிக்குள், பாகிஸ்தான்மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஒரு முக்கிய கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்’’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து துனியா செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளது.
பி.எம்.எல் - என் கட்சியின் தலைவர் எதிர்கட்சித் தலைவர்களிடம் ஒரு நாடாளுமன்ற கூட்டத்தில் பேசும்போது, ’’பி.பி.பி கட்சி மற்றும் பி.எம்.எல் -என் கட்சி மற்றும் ராணுவ தலைமை ஜெனரல் க்யூமார் ஜாவெத் பாஜ்வா ஆகியோர் அபிநந்தனை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இம்ரான் கான் கலந்துகொள்ள மறுத்துவிட்ட ஒரு கூட்டத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இருந்தார். அப்போது அங்குவந்த ராணுவ தலைமை ஜெனரல் பாஜ்வா வியர்த்துபோயிருந்ததுடன் அவரின் கால்கள் நடுங்கின. வெளியுறவுத்துறை அமைச்சர், அபிநந்தனை போகவிடுங்கள், இரவு 9 மணிக்குள் இந்தியா, பாகிஸ்தானை தாக்கவிருக்கிறது’’ என்று கூறியதாக அந்தக் கூட்டத்தொடரில் விவரித்துள்ளார்.
மேலும் அபிநந்தன் உள்ளிட்ட பல பிரச்னைகளில் எதிர்கட்சி அரசாங்கத்தை ஆதரித்துள்ளதாக சாதிக் கூறியதாகவும் துனியா செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது.