பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாமுக்கு மாரடைப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாமுக்கு மாரடைப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாமுக்கு மாரடைப்பு
Published on
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தவர். அவர் 375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11,701 ரன்களை எடுத்துள்ளார். 1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இன்சமாம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் பேட்டிங் ஆலோசகர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக பணியாற்றினார்.
இந்நிலையில் இன்சமாம்-உல்-ஹக்கிற்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்தது. லாகூரில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்சமாம்-உல்-ஹக் விரைவில் நலம்பெற அவரது ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com