அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு

அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு
அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு
Published on

அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்த பாகிஸ்தான் சர்வேதே ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் 1961-ம் ஆண்டு முதல் எவ்வித இடையூறும் இல்லாமல் அமெரிக்காவுக்கு விமான சேவை செய்து வருகிறது. நஷ்டம் காரணமாக அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்த பலமுறை முடிவு செய்தது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக தனது முடிவை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் கைவிட்டது. 

இந்த நிலையில், வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்தவுள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கான விமான சேவை மூலம் ஆண்டு ஒன்றிற்கு ரூ.125 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

மேலும் பாகிஸ்தான் சர்வேதே ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்ட பிறகு, அமெரிக்கா ஏர்லைன்ஸ் உடன் ஒப்பந்தம் போடப்படும். அதன்படி பயணிகள் பாகிஸ்தானில் இருந்து லண்டன் வரை சென்று அங்கிருந்து, பின் அமெரிக்கா செல்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com