“ஜெயிஷ்-இ-முகமது இயக்கத்தை பாக். உளவுத்துறை பயன்படுத்தியது” - முஷாரப் ஒப்புதல்

“ஜெயிஷ்-இ-முகமது இயக்கத்தை பாக். உளவுத்துறை பயன்படுத்தியது” - முஷாரப் ஒப்புதல்
“ஜெயிஷ்-இ-முகமது இயக்கத்தை பாக். உளவுத்துறை  பயன்படுத்தியது” - முஷாரப் ஒப்புதல்
Published on

தான் பதவி வகித்த காலகட்டத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை ஜெயிஷ்- இ- முகமது இயக்கத்தை பயன்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயிஷ்-இ-முகமது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெயிஷ்-இ-முகமது அமைப்பு தொடர்பாக குழப்பத்தை உருவாக்கவே பாகிஸ்தான் பார்ப்பதாக தெரிகிறது. முதலில் ஜெயிஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாத் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். ஆனால் மசூத் அசாத்தின் சகோதரர் இதனை மறுத்தார். இது குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் அசிப் கஃபூர், ஜெயிஷ்-இ-முகமது அமைப்பு பாகிஸ்தானில் இல்லை என்று தெரிவித்தார். 

பயங்கரவாத அமைப்பை காப்பாற்ற பாகிஸ்தான் முயற்சி எடுக்கிறதா என்று பலரும் சந்தேகம் எழுப்பும் நிலையில் இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை ஜெயிஷ்- இ- முகமது இயக்கத்தை பயன்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த முஷாரப் இதனை தெரிவித்துள்ளார். 

அதில் ஜெயிஷ்-இ-முகமது அமைப்புக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன். நான் பதவி வகித்த காலகட்டத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை ஜெயிஷ்- இ- முகமது இயக்கத்தை பயன்படுத்தியது. அந்த அமைப்பு என்னைக் கொலை செய்ய 2 முறை முயற்சி செய்தது என்று தெரிவித்துள்ளார். 

நீங்கள் ஏன் அந்த அமைப்பை ஒடுக்க முயற்சி எடுக்கவில்லை என்று கேட்கப்பட்டதற்கு அந்த நேரத்தில் சூழ்நிலை வேறு மாதிரி இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com