இம்ரான்கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி - வன்முறை களமாக மாறிய இஸ்லாமாபாத்

இம்ரான்கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி - வன்முறை களமாக மாறிய இஸ்லாமாபாத்
இம்ரான்கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி - வன்முறை களமாக மாறிய இஸ்லாமாபாத்
Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி சென்ற பேரணி வன்முறையில் முடிந்தது.  

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருக்கிறது எனக்கூறிய இம்ரான் கான், ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதை ஏற்க மறுத்து வருகிறார். மேலும் தனது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஐ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் தெஹ்ரிக் - ஐ - இன்சாஃப் கட்சி ஆதரவாளர்களுடன் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நேற்று பேரணியாகச் சென்றார். பேரணியை தடுத்து நிறுத்த இஸ்லாமாபாத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தடுப்புகளை மீறி இம்ரான்கான் ஆதரவாளர்கள் தலைநகர் நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இஸ்லாமாபாதில் வன்முறை வெடித்தது.

இஸ்லாமாபாதில் மெட்ரோ ரயில் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. வாகனங்கள், மரங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. ஊடக அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வன்முறை ஏற்பட்டது. இந்த மோதலில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதையும் படிக்கலாம்: அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 19 குழந்தைகள் உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com