இணையத்தில் வைரலாகும் பாகிஸ்தானிய டேட்டிங் செயலி ‘Muzz’ - ஏன்?

பாகிஸ்தான் டேட்டிங் செயலியான Muzz வெளியிட்டுள்ள விளம்பர பலகை ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Muzz டேட்டிங் ஆப்
Muzz டேட்டிங் ஆப்முகநூல்
Published on

சமீபகாலமாக டேடிங் செயலின் பயன்பாடு என்பது அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. உதாரணமாக டிண்டர் (Tinder), பம்பிள் (Bumble) தொடங்கி ஓகேகியூபிட் (OKCupid), Grindr போன்றவற்றை கூறலாம்.

Muzz டேட்டிங் ஆப்
ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 22: விட்னி வோல்ப் ஹெர்டின்- பெண்களுக்கு அதிகாரம் அளித்த இளம்பெண்!

இப்படிதான் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் Muzz என்ற டேட்டிங் செயலி ஒன்று விளம்பர பலகையில் வெளியிட்ட வாசகமானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

2015 ஆம் ஆண்டு ஷாஜாத் யூனாஸ் என்பவரால் நிறுவப்பட்ட முஸ்லீம் திருமணம் டேட்டிங் ஆப்தான் இந்த Muzz. இதன் டேக்லைன் "சிங்கிள் முஸ்லிம்கள் சந்திக்கும் இடம்" மற்றும் "முஸ்லிம்கள் சந்திக்கும் இடம்" என்பதாகும்.

இந்த டேட்டிங் ஆப் தரப்பிலிருந்து தற்போது வெளியாகியுள்ள ஒரு விளம்பரமும், அதிலிருந்த வாசகமும் பலரின் மத்தியில் பேசுபொருளாகி சர்ச்சையினை கிளப்பியுள்ளது.

அதன்படி அந்த சிவப்பு நிற விளம்பர பலகையில், “Cousins to choro, Koi aur dhoondo" என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, “உறவினர்கள் அல்லாமல் வேறு நபர்களை தேடுங்கள். இப்போதே Muzz செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்” என எழுதப்பட்டுள்ளது. இந்த வாசகம் இணையவாசிகளிடையே பெரும் நகைப்புக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகி இருக்கிறது.

இதனை கண்ட ஒருவர் இதனை புகைப்படம் எடுத்து தனது x வலைதளப்பக்கத்தில் வெளியிடவே பலர் இதனை ஷேர் செய்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பலரும், ‘இஸ்லாமியர்கள் உறவினர்களுக்கும் திருமணம் செய்யும் பாரம்பரியத்தை அதிகம் கொண்டிருப்பர்’ என்பதையே இந்த விளம்பரம் குறிப்பிடுவதாகவும், அதை இவ்விளம்பரம் விமர்சிப்பதாகௌவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com