கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவிலிருந்து பயணம் செய்ய இரண்டுவாரங்கள் தடை விதித்திருக்கிறது பாகிஸ்தான் அரசு.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகவேகமாக பரவி வருகிறது, இதன் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த சூழலில் இந்தியாவிலிருந்து பயணத்துக்கு இரண்டு வாரங்கள் தடைவிதித்து பாகிஸ்தான் அரசு நேற்று உத்தரவிட்டது.
இந்தியாவில் இதுவரை 1.50,61,805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த 15 நாட்களில் மட்டும் 25 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். தற்போது இந்தியாவில் கொரோனாவுக்கு 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 1,78,769 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
பாகிஸ்தானின் இந்த தடை குறித்து தெரிவித்த அமைச்சர் ஆசாத் உமர் “ கொரோனா தீவிரமாக பாதித்து வரும் சி பிரிவு நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளது. எனவே வான்வழி, தரைவழியாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.