பாகிஸ்தான் தனது ராணுவத் தலைமையகத்தை ராவல்பிண்டியிலிருந்து இஸ்லாமாபாதுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழு தலைவர் ஜமிருல் ஹசன் தெரிவித்தார்.
தலைமையகம் அமைப்பதற்காக இஸ்லாமாபாதில் 2 ஆயிரத்து 450 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ராணுவ தலைமையகத்தை இடம் மாற்றுவது குறித்து பாகிஸ்தான் அரசு கடந்த 57 ஆண்டுகளாக பரிசீலித்து வருகிறது.