மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயித்தை விசாரிக்கச் செல்லும் ஐ.நா.அதிகாரி களுக்கு விசா தர, பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள் ளது.
2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் மும்பையில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். மும்பை ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்டவற்றில் நடந்த இந்தக் கொடூர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உயிருடன் சிக்கிய பயங்கரவாதி கசாப்புக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயிதை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐ.நா சேர்த்துள்ளது. இந்நிலையில் அவனை விசாரிக்க ஐ.நா அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஐ.நா. அதிகாரிகள் விசாவுக்கு விண்ணப்பித்தினர். ஆனால் பாகிஸ்தான் விசா தர மறுத்துள்ளது.