“இந்தியர்கள் குருத்வாரா செல்ல பாலம் அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல்”- மத்திய அரசு

“இந்தியர்கள் குருத்வாரா செல்ல பாலம் அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல்”- மத்திய அரசு
“இந்தியர்கள் குருத்வாரா செல்ல பாலம் அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல்”- மத்திய அரசு
Published on

பாகிஸ்தான் தரப்பில் கர்தார்பூருக்கு செல்லும் வழியில் பாலம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூரில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் நினைவாக, இந்திய எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில், ’தர்பார் சாஹிப்’ என்ற குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் சீக்கியர்கள் விசா உள்ளிட்ட எந்த நடைமுறையும் இன்றி இந்த குருத்வாராவுக்கு செல்ல கர்தார்பூர் வழித்தட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று இருநாட்டு பிரதிநிதி குழுக்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் பாகிஸ்தான் அரசிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதுகுறித்து உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் தாஸ் கூறுகையில், “இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே முறையான தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும். மேலும் இந்தியாவிலிருந்து ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் குருத்வாராவிற்கு செல்ல அனுமதிக்குமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் தேரா பாபா நானக் பகுதியில் மழை வெள்ளம் ஏற்படுவது தொடர்பாகவும் பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது. இந்திய பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலம் குறித்த தகவல்கள் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பகிரப்பட்டன. அதேபோல பாகிஸ்தானும் அந்நாட்டு பகுதியில் பாலம் அமைக்க ஒப்புக்கொண்டுள்ளது. எனவே வரும் நவம்பர் மாதம் இந்த குருத்வாரா செல்லும் பணிகள் முடிந்துவிடும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com