உலக அளவில், கடந்த வாரத்தில் மட்டும் 34 லட்சம் பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய வாரத்தை விட 12 சதவிகிதம் அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், கடந்த வாரத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 57 ஆயிரம் எனவும், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் ஐ.நா-வின் சுகாதார அமைப்பு கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம், கடந்த வாரத்தில் இதோனேசியா, பிரிட்டன், பிரேசில், இந்தியா மற்றும் அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்ததாகக் கூறியுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு நாடும், தங்கள் மக்கள் தொகையில் 40 சதவிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை இந்தாண்டு இறுதிக்குள் உறுதிசெய்ய உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.