வங்கதேசத்தில் இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல்: சேதம் எவ்வளவு?

வங்கதேசத்தில் இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல்: சேதம் எவ்வளவு?
வங்கதேசத்தில் இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல்: சேதம் எவ்வளவு?
Published on

வங்காளதேசத்தில் இந்து கோவிலை ஒரு கும்பல் சேதப்படுத்தி சூறையாடியதில் பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்காளதேசம் நாட்டின் தலைநகரமான டாக்காவில் இஸ்கான் ராதகந்தா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை இன்று 200க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இந்தத் தாக்குதலில் கோயிலில் இருந்த சுமந்திர சந்திர ஷ்ரவன், நிஹார் ஹல்தார், ராஜீவ் பத்ரா உள்ளிட்ட பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்திய கும்பலுக்கு ஹாஜி ஷஃபியுல்லா என்பவர் தலைமை தாங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவலைத் தொடர்ந்து மத ரீதியான கலவரம் ஏற்பட்டது.  பல்வேறு இடங்களில் இந்து கோவில்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.  பின்னர் பாதுகாப்பு படையினர் கடுமையாக போராடி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறையில் 3 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.

இதையும் படிக்கலாம்: 'எனக்கு வேற வழி தெரியல' - அலுவலகத்தில் குடியேறிய ஊழியர்: என்ன காரணம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com