லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தினால் மட்டுமே போர் நிறுத்தத்திற்கான மறைமுக பேச்சுவார்த்தை சாத்தியப்படும் என ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயிம் காசிம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,"நீடிக்கும் இந்த மோதலுக்கு அரசியல் ரீதியான தீர்வு எட்டப்பட வாய்ப்பில்லை. போர்க்களத்தில் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அமெரிக்க அதிபராக யார் பொறுப்பேற்றாலும் எத்தகைய மாற்றமும் ஏற்படப் போவதில்லை." என்று நயிம் காசிம் கூறினார்.