5 கொரோனா நோயாளிகளில் ஒருவர் 90 நாட்களுக்குள் மனநோயாளி ஆகிறார்: ஆய்வில் தகவல்

5 கொரோனா நோயாளிகளில் ஒருவர் 90 நாட்களுக்குள் மனநோயாளி ஆகிறார்: ஆய்வில் தகவல்

5 கொரோனா நோயாளிகளில் ஒருவர் 90 நாட்களுக்குள் மனநோயாளி ஆகிறார்: ஆய்வில் தகவல்
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் 20% பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தி லான்செட் சைக்காட்ரி ஜார்னலில் இது குறித்த ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அமெரிக்காவைச் சேர்ந்த 69 மில்லியன் மக்களின் மின்னணு சுகாதார பதிவுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் பதிவுகளும் அடங்கும். 

கொரோனாவில் இருந்து தப்பிப் பிழைத்த ஐந்தில் ஒருவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நோயாளிகளுக்கு கவலை மனச்சோர்வு தூக்கமின்மை போன்றவை இருக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் பால் ஹாரிசன் கூறுகையில் "கொரோனாவிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் மனநல பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். எங்களது கண்டுபிடிப்புகளும் இது சாத்தியம் என்றே காட்டுகின்றன. கொரோனாவுக்கு பிறகு உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அவசரமாக காரணங்களை ஆராய்ந்து மனநோய்க்கான புதிய சிகிச்சையை கண்டுபிடிக்க வேண்டும். " எனத் தெரிவிக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com