ஒருநாள் வருமானம் ரூ.9 கோடி.. சாதித்த கார் மெக்கானிக் மகன்!

இன்றைய காலகட்டத்தில் பலர், தங்களது மாத வருமானத்தையே உயர்த்த திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், கார் மெக்கானிக்கின் மகன் நாள் ஒன்றுக்கு, 9 கோடி ரூபாய் சம்பாதிக்கும் விஷயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர் கிறிஸ் ஹான்
சர் கிறிஸ் ஹான்twitter
Published on

டிசிஐ முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனர் சர் கிறிஸ் ஹான், 2,800 கோடி ரூபாயை தனது வருமானமாக நிர்ணயித்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிசிஐ நிறுவனம் தற்போது இந்திய மதிப்பில் சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதிலிருந்து சுமார் 2,800 கோடி ரூபாயை தனது வருமானமாக கிறிஸ் ஹான் நிர்ணயித்த நிலையில், இது நாள் ஒன்றுக்கு 9 கோடி ரூபாய் என கணக்கிடப்படுகிறது.

தனது பணத்தின் பெரும்பகுதியை, குழந்தைகள் முதலீட்டு நிதி அறக்கட்டளை என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி வழங்கிவரும் அவர், பிரிட்டனின் தாராள மனம் படைத்தவர் எனவும் அறியப்படுகிறார். கார் மெக்கானிக்கின் மகனாக பிறந்த இவர் இன்று அதிக வருவாய் ஈட்டக்கூடிய நபராக மாறியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவரது நிறுவனத்தில்தான், தற்போதைய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 2006ஆம் ஆண்டு முதல் மூன்று வருடங்களுக்கு அனலிஸ்ட்டாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com