டெல்டா வகை கொரோனாவை விட ஒமைக்ரான் வகை கொரோனா, குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்துவது இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்விலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான், முதன்முதலாக கடந்த மாதம் தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் வேகமாக பரவிய போதிலும், அதன் முந்தைய வடிவமான டெல்டாவை காட்டிலும் இது குறைவான உடல் பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக தென்னாப்ரிக்க ஆய்வுகள் தெரிவித்தன.
இந்நிலையில் இங்கிலாந்திலும் ஒமைக்ரான் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில் அங்கும் புதிய தொற்றின் தன்மை குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போதுதான் ஒமைக்ரான் வேகமாக பரவுவதும் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் புதிய வகை கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசிகளின் திறன் குறைவாகவே இருப்பதாகவும் ஆய்வுகள் கூறியுள்ளன.
தொடர்புடைய செய்தி: ஒமைக்ரான் பரவல் தடுப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை