அமெரிக்காவில் வெள்ளை இனவாதம் அதிகரித்திருப்பதாக முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமாவும் ஜார்ஜ் புஷ்ஷும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் மக்களிடையே பிளவும், அச்சமும் அதிகரித்திருப்பதாக ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார். பொதுவெளியில் பாரபட்சம் காட்டும் போக்கு அதிகரித்து வருவதாக புஷ் கவலை தெரிவித்திருக்கிறார். எனினும் ட்ரம்பின் பெயரை இவர்கள் இருவரும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. அதேபோல், இரு முன்னாள் அதிபர்களின் கருத்துகளுக்கும் ட்ரம்ப் எந்த பதிலும் அளிக்கவில்லை. அமெரிக்காவைப் பொறுத்தவரை, முன்னாள் அதிபர்கள் அரசியல் கருத்துகளைக் கூறுவதில் இருந்து விலகி இருப்பது வழக்கம். அந்த மரபை மீறி ஒபாமாவும், புஷ்ஷும் கருத்துத் தெரிவித்திருப்பது அமெரிக்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.