வீட்டுப் பாடம் முடிக்காத சிறுமிக்கு சிறை ! அமெரிக்க நீதிமன்றத்தின் அதிர்ச்சியான தீர்ப்பு

வீட்டுப் பாடம் முடிக்காத சிறுமிக்கு சிறை ! அமெரிக்க நீதிமன்றத்தின் அதிர்ச்சியான தீர்ப்பு
வீட்டுப் பாடம் முடிக்காத சிறுமிக்கு சிறை ! அமெரிக்க நீதிமன்றத்தின் அதிர்ச்சியான தீர்ப்பு
Published on

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவி ஒருவர் சிறைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க - ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற 15 வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை எனக் கூறி கடந்த மே மாதம் அவரை சிறையில் அடைக்க நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் 'கிரேஸ்' என அறியப்படும் அந்த சிறுமிக்கு ஆதரவாக பள்ளி மற்றும் நீதிமன்ற வாசலில் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த மாணவியின் வழக்கை விசாரித்த ஓக்லாந்து குடும்ப நீதிமன்றம், அந்த மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறி இருக்கிறார் என்றும், அவர் மீதுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளை வைத்து அவர் இந்த சமூகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் தீர்ப்பளித்தது.

அந்த மாணவிக்கு ஆதரவாகப் பள்ளி முன்பும், நீதிமன்றம் முன்பும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை மிக்சிகன் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தண்டனை வழங்கப்பட்ட மாணவி கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கு இப்போது கூடுதல் கவனம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com