அமெரிக்காவின் நியூயார்க்கில் நிர்வாக ரீதியான நீதிபதியாக இருந்தவர் 33 வயதான கிரேகோரி.ஏ.லோக். இவர் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் வெவ்வேறு பெயர்களில் ஆபாச வீடியோக்கள் போட்டோக்களை பகிர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை கொண்டிருந்த கிரேகோரி லோக், அதில் ஒரு கணக்கில் பார்ன் ஸ்டாராக இருக்க மாதம் 12 அமெரிக்க டாலர்களும், மற்றொறு கணக்கில் 9.99 டாலர்களும் கட்டணமாக பெறுகிறார் என நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.
லோக்கின் ட்விட்டர் கணக்குகளில் டஸன் கணக்கில் ஆபாச வீடியோக்கள் ஃபோட்டோக்களும் தொடர்ந்து பதிவேற்றப்பட்டிருக்கிறது. அதில் சமயங்களில் தன்னை ஒரு நீதிபதி என்றும் கூட கிரேகோரி லோக் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.
இதனை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் முதலே செய்து வந்திருக்கிறாராம் லோக். தொடர்ச்சியாக அவருக்கு வரும் கமென்ட்களுக்கு பதிலளித்தன் மூலம்தான் கிரேகோரியின் இந்த செயல் வெளி உலகத்துக்கு தெரிய வந்ததாகவும் நியூயார்க் போஸ்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து கடந்த செவ்வாயன்று லோக்கின் நீதிபதி பதவியை பறித்து அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நியூயார்க் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட் தளத்திடம் பேசியுள்ள நகர பெண் கவுன்சில் அதிகாரி விக்கி பாலடினோ, “இந்த நகரம் ஒவ்வொரு மட்டத்திலும் அதன் நீதிமன்றங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.
மேலும் லோக் போன்ற நபர்களை சட்டப்பூர்வ பதவிகளில் அமர்த்துவது எங்கள் நிறுவனங்களின் தொழில்முறை மற்றும் சார்பற்ற தன்மையின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது” என்று கூறியிருக்கிறார்.