விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ்

விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ்
விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ்
Published on

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளுநரிடம் அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 
அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் புகார் எழுந்ததை அடுத்து, அவர்களைத் தாமாக முன்வந்து பதவி விலகுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார். ஊழல் புகாருக்கு ஆளான மேலும் இரு அமைச்சர்களுக்கு கட்டாய விடுப்பளித்தும் உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து, அதனை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆளுநரிடம் அளித்தனர். இதனால், வடமாகாண அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சுமூகத் தீர்வு காணப்பட்டது. இதனையடுத்து, விக்னேஸ்வரனுக்கு எதிராக அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கூட்டணிக் கட்சியினர் திரும்பப்பெற்றுள்ளனர். இதனிடையே பிரச்சனைக்குள்ளான அமைச்சர்களின் பொறுப்புகளான விவசாயம், கல்வி ஆகிய துறைகளுக்கான பொறுப்பையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூடுதலாக ஏற்றுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com