அமெரிக்காவை சேர்ந்த கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான நோவாவாக்ஸ், தங்களது தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்க வேண்டும் என இந்தியாவிடம் விண்ணப்பம் செய்துள்ளது.
தற்போது உலகம் முழுவதிலும் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் , நோவாவாக்ஸ் தடுப்பூசி பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டது என்பதால் இதன் செயல்திறன் வலிமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
தற்போது நோவாவாக்ஸ் தடுப்பூசியின் பரிசோதனை நிறைவடையும் தருவாயில் இருப்பதால் , தடுப்பூசி தேவை அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு முதலில் வழங்குவதென அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிடம் அவசர கால அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பம் செய்துள்ளது. இந்தியா இதற்கு அனுமதி அளித்தால் தடுப்பூசி தட்டுப்பாடு குறையும் வாய்ப்புள்ளது.