இனி ஏவுகணை சோதனை இல்லை: வடகொரியா அறிவிப்பு, அமெரிக்கா வரவேற்பு

இனி ஏவுகணை சோதனை இல்லை: வடகொரியா அறிவிப்பு, அமெரிக்கா வரவேற்பு

இனி ஏவுகணை சோதனை இல்லை: வடகொரியா அறிவிப்பு, அமெரிக்கா வரவேற்பு
Published on

இனி, அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்த மாட்டோம் என்று வடகொரியா ‌அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். 

அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அதிபர் அறிவித்துள்ளதாக, வடகொரிய அரசின் அதிகாரப்பூர்வமான செய்தி ஊடகம் கூறியுள்ளது. மேலும், ஏவுகணை சோதனைக்கான ஏவுதளங்களையும் மூடப் போவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த அறிவிப்பிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜுன் மாதத்தில் அமெரிக்க அதிபருடன் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com