விமானப் பாதையில் வடகொரியாவின் ஏவுகணை: சர்வதேச விமானங்களுக்கு ஆபத்தா?

விமானப் பாதையில் வடகொரியாவின் ஏவுகணை: சர்வதேச விமானங்களுக்கு ஆபத்தா?
விமானப் பாதையில் வடகொரியாவின் ஏவுகணை: சர்வதேச விமானங்களுக்கு ஆபத்தா?
Published on

வடகொரியா எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஏவுகணை சோதனை நடத்துவதால் அதன் வான் பகுதியை ஒட்டி பறக்கும் சர்வதேச பயணிகள், விமானங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வடகொரியா கடந்த வாரம் ஹவசாங் 15 என பெயரிடப்பட்ட ஏவுகணை சோதனையை நடத்தி மீண்டும் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது. ஏவுகணை சோதனை நடத்தும் போது பயணிகள் விமானத்தின் மீது மோதுவதை தவிர்க்க, சர்வதேச நாடுகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும். சோதனை நடக்கும் வான் பரப்பில் விமானங்கள் செல்வதற்கும் தடை விதிக்கும். ஆனால் மற்ற நாடுகளைப் போல அல்லாமல் வடகொரியா எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த சோதனையை நடத்தி இருக்கிறது. இதன் காரணமாக வடகொரியா வான் பகுதியை ஒட்டி பறக்கும் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் சர்வதேச விமான போக்குவரத்து பற்றிய அட்டவணையை ஆராயும் அனுமதி வடகொரியாவிடம் இருப்பதால், பயணிகள் விமானங்கள் செல்லும் பாதையை தவிர்க்கும் வகையிலேயே இந்த சோதனையை அந்நாடு நடத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனினும் பயணிகளின் உயிரை காப்பாற்றும் வகையில் வடகொரியா வான்வழியாக செல்ல வேண்டாம் என தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

வடகொரியா, தான் சோதித்த ஏவுகணை சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் படைத்தது என்றும் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை தாக்கும் வல்லமை படைத்தது என்றும் அறிவித்தது. எனினும் அந்த ஏவுகணை விண்ணுக்கு சென்ற பின், பூமியின் வளிமண்டலத்தில் சிதையாமல் நுழைந்து இலக்கை தாக்கும் திறன் படைத்ததா என்ற சந்தேகம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இதுவரை இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த ஏவுகணை மிக உயரத்தில் இருந்து பாதுகாப்பாக இலக்கை அடைந்ததாக ஜப்பானின் வான் வழியாக பறந்து கொண்டிருந்த விமான சிப்பந்திகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் சியோலில் இருந்து அமெரிக்கா சென்று கொண்டிருந்த இரு தென்கொரிய விமான சிப்பந்திகளும் அந்த ஏவுகணையை பார்த்தாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com