வடகொரியாவை முதல் முறையாக தாக்கிய கொரோனா - அவசரநிலையை அறிவித்தார் கிம் ஜாங் உன்

வடகொரியாவை முதல் முறையாக தாக்கிய கொரோனா - அவசரநிலையை அறிவித்தார் கிம் ஜாங் உன்
வடகொரியாவை முதல் முறையாக தாக்கிய கொரோனா - அவசரநிலையை அறிவித்தார் கிம் ஜாங் உன்
Published on

வட கொரியாவில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தேசிய அவசரநிலையை அறிவித்திருக்கிறார்.

உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த கொரோனா பாதிப்பு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வடகொரியாவில் ஒருவரைக் கூட பாதிக்கவில்லை என அந்த நாட்டு அரசால் சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் வட கொரியாவில் முதல் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் நாட்டில் "கடுமையான தேசிய அவசரநிலை" பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இந்த பாதிப்பு மேலும் அதிகமாகுமா என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை, ஆனால் வடகொரியாவின் ஏற்கனவே சுகாதார கட்டமைப்பு மிக மோசமாக உள்ளதால் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது, முக்கியமாக வடகொரியாவின் 26 மில்லியன் மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலரின் இரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது, அதில் ஒருவர்  ஓமைக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வடகோரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டில் உள்ள நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் முழுமையான பொதுமுடக்கத்துக்கு அழைப்பு விடுத்தார்,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com