”அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும்” - தென்கொரியா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உன்!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ”தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்கோப்புப் படம்
Published on

ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவிற்கும், அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுக்கும் அவ்வப்போது அச்சத்தை ஏற்படுத்திவருகிறது, வடகொரியா. இந்த நாடு, உலகின் மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டது. காரணம், அந்நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு.

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது அந்நாடு.

இதையும் படிக்க: காஸா போர் | ஒரு மணி நேரத்தில் 120 ஹிஸ்புல்லா இலக்குகள் அழிப்பு.. இஸ்ரேல் ராணுவம் அதிரடி!

கிம் ஜாங் உன்
”வடகொரிய பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்”- மேடையில் கண்ணீர்விட்டு அழுத கிம் ஜாங் உன்!

வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணை சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான். மேலும், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக தென்கொரியாவின் திறன்களுடன் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை இணைக்கும் திட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்ட்விட்டர்

இந்த நிலையில்தான், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரிய தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் நேற்று உரையாற்றிய கிம் ஜான் உங், “உண்மையைச் சொல்வதென்றால், தென் கொரியாவைத் தாக்கும் எண்ணம் எங்களுக்கு முற்றிலும் இல்லை. அதேநேரத்தில், எதிரிகள் ஆயுதங்கள் தாங்கிய படைகளைப் பயன்படுத்த முற்பட்டால் தயக்கமின்றி அவர்களுக்கு எதிராக அனைத்து தாக்குதல் திறன்களையும் பயன்படுத்துவோம். அதில், அணு ஆயுதங்கள் பயன்பாட்டையும் தவிர்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: காதலரிடம் ஆலோசனை.. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 13 உறவினர்களை விஷம் வைத்துக் கொன்ற பாகி. சிறுமி!

கிம் ஜாங் உன்
”போருக்கு ஆயத்தமாகுங்கள்” - அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com