தென்கொரிய எல்லையில் 130 முறை பீரங்கி குண்டுகள் வீச்சு.. மீண்டும் பதறவைத்த வடகொரியா!

தென்கொரிய எல்லையில் 130 முறை பீரங்கி குண்டுகள் வீச்சு.. மீண்டும் பதறவைத்த வடகொரியா!

தென்கொரிய எல்லையில் 130 முறை பீரங்கி குண்டுகள் வீச்சு.. மீண்டும் பதறவைத்த வடகொரியா!
Published on

தென்கொரிய எல்லைப் பகுதியில் வடகொரியா 130 முறை பீரங்கி குண்டுகளை வீசியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்நிலையில், மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இருந்து இன்று வடகொரியா ராணுவம், பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வட கொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதில் கொடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் தென் கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு கொரிய நாடுகளுக்கு இடையே என்னதான் பிரச்சனை?

ஒருங்கிணைந்த கொரியாவை ஜப்பான் தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. பின்னர், 1945இல் கொரியா விடுதலை பெற்றது. அதன் பின்னர் வட பகுதி கொரியாவில் சோவியத் நாடும், தென் பகுதி கொரியாவில் அமெரிக்காவும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது. 1950ல் தொடங்கிய கொரியப் போர் மூன்று வருடங்கள் நீடித்தது. இந்த போரில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகளாக கொரியா பிரிந்தது. அப்போதிலிருந்தே இரு நாடுகள் இடையே பிரச்சனைகள் இருந்து வருகிறது. கம்யூனிச நாடான வட கொரியா சர்வாதிகார தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளது. தென் கொரியா, அமெரிக்கா பின்பற்றும் முதலாளித்துவ கொள்கையை பின்பற்றி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com