வடகொரிய அணுகுண்டில் மலையே நகர்ந்துபோகுமாம் - வெளியான அதிர்ச்சித் தகவல்

வடகொரிய அணுகுண்டில் மலையே நகர்ந்துபோகுமாம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
வடகொரிய அணுகுண்டில் மலையே நகர்ந்துபோகுமாம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
Published on

வடகொரியா தனது அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிடாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனுக்கான வடகொரிய தூதராக இருந்த தே யங் ஹோ என்பவர் இதைத் தெரிவித்ததாக தென் கொ‌ரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அணு ஆயுத ஒழிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரும் 12ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க உள்ளனர். இதற்கிடையில் வரும் 22ம் தேதியிலிருந்து 25ம் தேதிக்குள் அணு ஆயுத சோதனை மையத்தை முற்றிலும் கலைக்கப்போவதாகவும் வடகொரியா கூறியிருந்தது. 

இந்நிலையில் வடகொரியா வசம் உள்ள அணுஆயுதங்கள் குறித்த பிரமிக்கத்தக்க தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்காவின் அணுகுண்டை விட 10 மடங்கு வலிமையான குண்டுகளை வட கொரியா வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மலையையே நகர்த்தும் அளவுக்கு இந்த அணுகுண்டுக்கு ஆற்றல் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

முன்னதாக, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. இதனால் ஜப்பான், தென்கொரிய உள்ளிட்ட பல நாடுகள் வடகொரியாவிற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன. அமெரிக்க பலமுறை கண்டித்தும், ஐநா சபை எச்சரித்தும் வடகொரிய தனது அணுகுண்டு ஏவுகணை சோதனைகளை கைவிடவில்லை. இந்நிலையில் தான் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே மீண்டும் நட்பு மலர்ந்தது. இதற்கிடையே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா சென்றுவந்தார். 

பின்னர் வடகொரிய அதிபரை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பேச்சுவார்த்தை நடத்த, பாலமாக இருந்து தென்கொரியா இருநாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனால் வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகள் முற்றிலும் என நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணுஆயுதங்களை வடகொரியா முற்றிலும் கைவிடாது என்ற தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com