வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ! டெர்ராபின் ஆமையை பரிந்துரைக்கும் அரசு

வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ! டெர்ராபின் ஆமையை பரிந்துரைக்கும் அரசு
வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ! டெர்ராபின் ஆமையை பரிந்துரைக்கும் அரசு
Published on

வடகொரியாவில் கொரோனாவால் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால்  மக்களுக்கு பசியை போக்கும் ஒருவகை ஆமையை பரிந்துரை செய்து வருகிறது அந்நாட்டு அரசு. 

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மேற்கொண்டுவந்த அணுஆயுத நடவடிக்கைகளால் அந்நாட்டுக்கு ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் அமெரிக்காவும் தடையை நீக்க அவர்கள் முன்வராத காரணத்தால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டிரம்ப்-கிம் ஜாங் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இப்போது கொரோனா பரவலால் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பசியால் கடும் துயரத்திற்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு வடகொரிய நிர்வாகம், ஒருவகை ஆமையை உணவாக கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அங்குள்ள விஞ்ஞானிகள் குழு, பசியை போக்கும் மருந்ததை கண்டு பிடிக்கும் முனைப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் அரிசி, சோளம், பழம், இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறைக்கு மத்தியில் அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மக்களுக்கு தொடர்ந்து வலியுறித்தி வருகிறது.

அதில், டெர்ராபின் எனப்படும் அந்த ஆமை வகை அதன் நல்ல சுவை மற்றும் ஏராளமான ஊட்டச்சத்து கூறுகளுக்காக உயர் ரக உணவுகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டது எனவும், இந்த உணவை மக்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஹெபடைடிஸ், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்களைக் குணப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com