நூற்றுக்கணக்கான எலும்புகள் ஒரே நேரத்தில் உடைவதுபோன்ற வலியை கொடுக்கக்கூடியது பிரசவ வலி என விளக்கப்படுகிறது. இதற்கு உடல் மற்றும் மன வலிமை இரண்டும் தேவை. மணிக்கணக்கான பிரசவ வலி, தூக்கமின்மைக்கு நடுவிலேயே ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் கர்ப்பமடையாமலேயே, குழந்தை பெற்றெடுக்காமலேயே 26 வயது பெண் ஒருவர் கடுமையான பிரசவ வலியை அனுபவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 26 வயதான ஹோலி ஸ்மால்வுட் என்ற பெண்தான் இந்த கொடூர நிலைக்கு ஆளாகியுள்ளார். பொதுவாக செய்யக்கூடிய கருத்தடை சிகிச்சையானது தவறாக முடிந்ததே இந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. மகப்பேறு மருத்துவரிடம் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள சென்ற ஸ்மால்வுட்டிற்கு காப்பர் IUD பொருத்தப்பட்டது. வலி அதிகமாக இருக்கும் என்று சொல்லியே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தன்னால் வலியை பொருத்துக்கொள்ள முடியும் என்று மருத்துவரிடம் கூறியே பொருத்திக்கொண்டார் ஸ்மால்வுட்.
இருப்பினும் IUD பொருத்தியபோதே ஒரு வித்தியாசமான வலியை உணர்வதாக மருத்துவரிடம் கூறியிருக்கிறார் ஸ்மால்வுட். நேரம் ஆக ஆக அவரால் வலியை தாங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த அவர் சில நிமிடங்கள் கழித்து எழுந்துள்ளார். அப்போது அவரது பிறப்புறுப்பு உணர்ச்சி இழந்துவிட்டதை மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். மேலும், கைகள், கால்களும் உணர்ச்சி இழந்ததை உணர்ந்த அவருக்கு வலியால் அதீத வியர்வை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உடல் தசைகள் இழுக்க ஆரம்பித்துள்ளது.
IUD சிகிச்சையில் தவறு நேர்ந்துள்ளதை உணர்ந்த மருத்துவர் உடனடியாக பொருத்தப்பட்ட காப்பர் IUD -ஐ வெளியேற்ற வேண்டும், அப்போது ஸ்மால்வுட் பிழைக்கமுடியும் என கூறிவிட்டார். அதாவது ஒரு நரம்பின்மீது IUD பொருத்தப்பட்டதால் அதனை வெளியேற்ற பிரசவத்திற்கு கொடுக்கவேண்டிய முயற்சியை கொடுக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும், இந்த சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுக்கமுடியாது எனவும் கூறிவிட்டனர். ஒருவழியாக IUD-ஐ வெளியேற்ற ஸ்மால்வுட் மீண்டும் பிரசவ வலியை அனுபவித்துள்ளார்.
கருத்தடை அறுவைசிகிச்சைக்கு பதிலாக செய்யப்படும் மற்றொரு சிகிச்சை IUD.அதாவது கருப்பை கருத்தடை சாதனம் ஒன்று பிறப்புறுப்பின் வழியாக கர்ப்பப்பை உள்ளே பொருத்தப்படும். இது காப்பர் வடிவிலோ அல்லது ஹார்மோனல் (Mirena) வடிவிலோ இருக்கலாம்.