டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் நகரில் அமைந்த நோக்கியா தொழிற்சாலையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட நோக்கியா 3310 மாடல் செல்போனுக்கு வயது இருபது. எத்தனையோ ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வந்தாலும், அந்த மாடலுக்கு உள்ள மதிப்பு மக்களிடம் கொஞ்சமும் குறையவில்லை.
நோக்கியா நிறுவனத்தின் புகழ்பெற்ற 3310 மாடல் செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த செப்டம்பர் முதல் தேதியுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ளது. சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் அதைப் பற்றிய நீங்காத நினைவுகளை வெளியிட்டுவருகின்றனர்.
இந்த செல்ஃபோனின் சிறப்பு குறித்து ட்விட்டரில் பலரும் பதிவிட்டுள்ளனர். பிரபல தொழில் நுட்ப வல்லுநரான வாலா அஃப்சர், உலகெங்கும் 12 கோடியே 60 லட்சம் 3310 மாடல் ஃபோன்கள் விற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை வெளியான மிகச்சிறந்த மாடல்களில் இதுவும் ஒன்று என ஒருவர் பதிவிட்டுள்ளார்.