2021 ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த டேவிட் கார்டு, ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கெய்டோ இம்பென்ஸ் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொடர்பான அறிவிப்பை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் சுவீடிஷ் அகாடமி நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பின்படி, டேவிட் கார்டுக்கு ஒரு விருது முழுவதுமாகவும், ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் - கெய்டோ இம்பென்ஸூக்கு இணைந்து ஒரு விருதும் அளிக்கப்படுவதாக தெரிகிறது.
தொழிலாளர் தொடர்பான பொருளாதாரத்தில் அளித்த பங்களிப்பிற்காக டேவிட் கார்டுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. போலவே ஜோஷுவா ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ இம்பென்ஸ் ஆகியோர், காரண உறவுகள் குறித்து செய்த பகுப்பாய்விற்காக நோபல் பரிசை பெறுகின்றனர். இவர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பானது அவதானிப்பு தரவுகளுடன் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: அமைதிக்கான நோபல் பரிசு - பத்திரிகையாளர்கள் இருவருக்கு பகிர்ந்தளிப்பு
முன்னதாக கடந்த சில தினங்களாக மருத்துவம் - இயற்பியல் - வேதியியல் - இதழியல் - இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த வரிசையில் இன்று பொருளாதாரத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.