ஹேக்கிங் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.. ஆப்பிள் நிறுவனம் விளக்கம்

ஹேக்கிங் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.. ஆப்பிள் நிறுவனம் விளக்கம்
ஹேக்கிங் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.. ஆப்பிள் நிறுவனம் விளக்கம்
Published on

தங்கள் நிறுவனங்களின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை ப்ளூம்பர்க் வாரஇதழ் ஒன்று ஆப்பிள் நிறுவனம் குறித்த செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அமெரிக்க நிறுவன ஆப்பிள் சர்வர்களில் சிறிய சிப் பொருத்தப்பட்டு அதன்மூலம் சீன உளவாளிகள் ஆப்பிள் நிறுவன தரவுகளை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த புகார் தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் தீவிர சோதனையில் ஈடுபட்டது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் உயரதிகாரி அமெரிக்க செனட் சபைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆப்பிள் நிறுவனத்தின் தரவுகள் எந்தவகையிலும் வெளியே சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கிடமான எந்த பரிமாற்றங்களும் நடைபெற்றதற்கான சிறிய ஆதாரங்கள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்து. துல்லியமாக நடைபெற்ற சோதனையில் எந்தவித நவீன வழி ஊடுருவலும் நடைபெறவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள்  நிறுவனம் தொடர்ச்சியாக இந்த விஷயத்தில் விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com