காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள 370-ஆவது சட்டப்பிரிவு ரத்து தொடர்பான வழக்குகளை 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 மனுக்களை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்குகளை 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது 370ஆவது சட்டப் பிரவு ரத்து தொடர்பான வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற முடியாது. இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே தொடர்ந்து விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.