பைசர்-பயோ என்டெக் தடுப்பூசி இங்கிலாந்தில் பரவும் புதியவகை கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஐரோப்பிய அதிகாரி கூறியுள்ளார்
பைசர்-பயோ என்டெக் தடுப்பூசி, இங்கிலாந்தில் வேகமாக பரவிவரும் புதியவகை கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யுமா என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு தலைவர், பைசர்- பயோ என்டெக் தடுப்பூசி முக்கியமாக பிரிட்டனில் காணப்படும் கொரோனா வைரஸின் புதிய பாதிப்புக்கு எதிராக பாதுகாக்கும் என்று தோன்றுகிறது எனத் தெரிவித்தார்.
"இந்த பைசர் தடுப்பூசி புதிய கொரோனா வைரஸ்க்கு எதிராக செயல்படாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று ஐரோப்பிய மருந்துகள் முகமைத் தலைவர் எமர் குக் கூறினார்.