ஏன் ரஷ்யாவுடன் நேரடியாக மோதவில்லை - விளக்கமளித்த ஜோ பைடன்

ஏன் ரஷ்யாவுடன் நேரடியாக மோதவில்லை - விளக்கமளித்த ஜோ பைடன்
ஏன் ரஷ்யாவுடன் நேரடியாக மோதவில்லை - விளக்கமளித்த ஜோ பைடன்
Published on

3ஆம் உலகப் போரை தவிர்க்கவே ரஷ்யாவுடன் நேட்டோ படைகள் நேரடியாக மோதவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பாவில் உள்ள தங்கள் கூட்டணி நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கப்போவதாக தெரிவித்தார். நேட்டோ நாடுகளுக்குள் பிரிவினை ஏற்படுத்தும் முயற்சியில் ரஷ்ய அதிபர் புடின் தோற்று விட்டதாகவும் பைடன் தெரிவித்தார்.



உக்ரைனை ரஷ்யா ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற உலக நாடுகளும் ஆதரவாக இருப்பதாகவும் பைடன் பேசினார். ரஷ்யா ஏற்கனவே மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புடின் தொடர்ந்து போர் நடத்திக்கொண்டிருந்தால் மேலும் பல பொருளாதார தடைகள் அந்நாடு மீது விதிக்கப்படும் என்றும் பைடன் எச்சரித்தார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஒருவேளை ரசாயன ஆயுதங்கள் பிரயோகித்தால் அதற்கு அந்நாடு மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டி வரும் என்றும் அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்தார்.

முன்னதாக அமெரிக்கா ஆதரவுடன் உக்ரைன் தனது நாட்டில் உயிரியல் ஆயுத தயாரிப்பு ஆய்வகத்தை நடத்தி வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால் இதை அமெரிக்காவும் உக்ரைனும் மறுத்திருந்தன





Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com