ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய்யின் விலை அமெரிக்க மக்களை பாதிக்காத வகையில் ஈரான், வெனிசுவேலா போன்ற நாடுகளுடன் இறக்குமதி குறித்து பேச்சுவார்த்தை உள்ள்ளிட்ட நடவடிக்கைகளை பைடன் எடுத்து வருவதாகவும் செய்தித்தொடர்பாளர் ஜென் சகி கூறினார்.
உக்ரைனில் உள்ள நிலவரத்தால் கச்சா எண்ணெய் விலை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அனைத்து உற்பத்தி நாடுகளுடனும் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். போலந்து உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்புவதை அமெரிக்கா எதிர்க்கவில்லை எனவும் அவர் கூறினார்.