'நித்யானந்தா உயிருக்கு ஆபத்து.. புகலிடம் கொடுங்கள்' இலங்கையிடம் உதவி கேட்ட கைலாசா அமைச்சர்

'நித்யானந்தா உயிருக்கு ஆபத்து.. புகலிடம் கொடுங்கள்' இலங்கையிடம் உதவி கேட்ட கைலாசா அமைச்சர்
'நித்யானந்தா உயிருக்கு ஆபத்து.. புகலிடம் கொடுங்கள்' இலங்கையிடம் உதவி கேட்ட கைலாசா அமைச்சர்
Published on

சாமியார் என தன்னை அடையாளம் படுத்திக் கொண்ட நித்யானந்தா மீது பாலியல் வழக்கு தொடங்கி பல மோசடி வழக்குகள் இருந்ததால் இந்தியாவை விட்டே தப்பியோடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதற்கு அதிபரே நான்தான் எனவும் அறிவித்திருந்தார்.

இதுபோக கைலாசாவுக்கென தனி நாணயம், விசா என அனைத்தையும் அறிமுகம் செய்ததோடு அவ்வப்போது வீடியோ வெளியிட்டும் காண்போரை அசரச் செய்திருக்கிறார். மேலும் கைலாசாவில் தொழில் தொடங்கவும், அங்கு சென்று வாழவும் விருப்பம் தெரிவிப்பவர்கள் தாராளமாக வந்து சேரலாம் என அதிரடியாக அறிவித்து அதகளம் செய்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கையில், கைலாசாவில் இருக்கும் நித்யானந்தாவின் உடல் நிலை சரியில்லாததால் அவருக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க உதவுமாறு இலங்கையின் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி கைலாசாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் என கூறக் கூடிய நித்யபிரேமாத்ம ஆனந்த சுவாமி என்பவர் கடிதம் எழுதியிருப்பதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:

“நித்யானந்தாவின் உடல்நலம் ஆபத்தான நிலையில் உள்ளது. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கைலாசாவில் போதுமான மருத்துவ வசதி இல்லாததால் அவரது உடல் நலத்திற்கு என்ன நேர்ந்தது என கண்டறிய முடியவில்லை. அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு நித்யானந்தாவிற்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

நித்யானந்தாவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அரசியல் புகலிடமாக பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மருத்துவ உதவியும் வழங்க வேண்டும். அவரது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் கைலாசா அரசே ஏற்றுக்கொள்ளும். நித்யானந்தாவுக்கு பாதுகாப்பான இடமும், மருத்துவ உதவியும் மட்டும் கொடுத்தால் போதும்.

அவரது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான எல்லா உபகரணங்கள், சாதனங்களையும் கைலாசா அரசே கொள்முதல் செய்துக்கொள்ளும். நித்யானந்தாவின் உயிரை காப்பாற்றும் நலன் பொருட்டு அந்த உபகரணங்கள் அனைத்தையும் இலங்கைக்கே கொடுத்து விடுகிறோம். உங்களுடன் ராஜாங்க ரீதியான உறவை ஏற்படுத்திக் கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com