உலகப் புகழ் பெற்ற நிஸ்ஸான் வாகன நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் , நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த நிசான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் கார்லோஸ் கோஸ்ன். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனோ, ஜப்பானைச் சேர்ந்தச் மிட்சுபிஷி ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர் பொறுப்பிலும் உள்ளார். இந்நிலையில் இவர் மீதும், நிசான் இயக்குனர் குழு உறுப்பினர் கிரேக் கெல்லி என்பவர் மீதும் நிதி முறைகேடு புகார் வைக்கப்பட்டது. தங்களது வருவாயை குறைத்து காண்பித்தது, நிறுவனத்தின் சொத்துகளை சுயதேவைக்கு பயன்படுத்தியது உள்ளிட்ட நிதி முறைகேட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
குற்றச்சாட்டுகள் குறித்து ஜப்பான் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது முறைகேடுகளை கார்லோஸ் கோஸ்ன் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து கார்லோஸ் கோஸ்ன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையை அடுத்து கார்லோஸ் கோஸ்னை தலைவர் பதவியில் இருந்து நீக்க உள்ளதாக நிசான் நிறுவனம் அறிவித்தது.
நஷ்டத்தில் சென்றுக்கொண்டிருந்த நிஸ்ஸான் நிறுவனத்தை வாகன சந்தையில் முக்கிய இடத்துக்கு உயர்த்தியவர் கார்லோஸ் கோஸ்ன் என்பவர் குறிப்பிடத்தக்கது.