நிகோலா கார்ப்பரேஷனின் நிறுவனரும், தலைவருமான ட்ரெவர் மில்டன் தனது நிறுவனத்தில் முதன்முதலில் இணைந்த 50 ஊழியர்களுக்கு 6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (44 கோடி ரூபாய்) நிகரான தனது சொந்த பங்குகளை கொடுத்துள்ளார்.
எலக்ட்ரிக் வாகனங்களை வடிவைமைப்பது மற்றும் தயாரிப்பது மாதிரியான பணிகளில் ஈடுபட்டு வருகிறது நிகோலா கார்ப்பரேஷன் நிறுவனம்.
‘நான் எங்கள் நிறுவனத்தை ஆரம்பித்தபோது உலகின் மிகச் சிறந்த பணியாளர்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அது மிகப்பெரிய சவாலான காரியம்.
அப்படி நான் எங்கள் நிறுவனத்தில் இணைந்த முதல் 50 ஊழியர்களிடம் ஒரு வாக்குறுதியை கொடுத்திருந்தேன். அதன்படி எனது வாக்குறுதியை இப்போது நிறைவேற்றி உள்ளேன்.
இதே வேகத்தில் எங்கள் வளர்ச்சி இருந்தால் அடுத்து வரும் நாட்களில் அவர்களுக்கு பில்லியன் மத்திப்பிலான பங்குகளை கொடுப்பேன்’ என ட்விட்டர் வீடியோவில் தெரிவித்துள்ளார் ட்ரெவர் மில்டன்.