தொலைதூர காதல்| புது மனைவிக்காக தினமும் 320 கி.மீ. பயணிக்கும் சீன இளைஞர்

சீனாவில் புதிதாக திருமணமான இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவிக்காக தினமும் 320 கிலோமீட்டர் சுற்றுப்பயணத்தை சகித்துக்கொண்டு வேலைக்குச் சென்று வருகிறார்.
லின் ஷு
லின் ஷுஎக்ஸ் தளம்
Published on

காதல் என்பது ஓர் உணர்வுப்பூர்வமான விஷயம். அது ஒரு மனிதனுக்குள் வந்துவிட்டால் பசி, தூக்கம், மகிழ்ச்சி, மாற்றம் என எல்லா வகையிலும் அவனுடைய உணர்வுகளை உணர முடியும் என்பதற்கு எத்தனையோ விஷயங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். அப்படியான ஒரு விஷயம் நமது அண்டை நாடான சீனாவில் அரங்கேறி உள்ளது. சீனாவில் புதிதாக திருமணமான இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவிக்காக தினமும் 320 கிலோமீட்டர் சுற்றுப்பயணத்தை சகித்துக்கொண்டு வேலைக்குச் சென்று வருகிறார்.

சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் வெய்பாங் நகரைச் சேர்ந்தவர் லின் ஷு. இவர், தாம் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் கடந்த மே மாதம் நடைபெற்றது. காதலி, மனைவியான பின்னும் அவர் மீது, லின் கொண்ட காதல் குறையவில்லை. அவருக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், திருமணத்திற்கு முன்பு, வாடகைக்கு தங்கியிருந்த இடத்தில் இருந்து ஒரு மணிநேரத்தில் வேலை செய்யும் இடத்திற்கு சென்றுவந்த லின், தற்போது மனைவி வந்ததும் அவருடன் அதிக நேரம் செலவிட விரும்பியுள்ளார். இதற்காக மனைவியின் சொந்த ஊரான வெய்பாங் நகரிலேயே தங்கி, அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்து அவருடைய அன்பில் தினம் நனைந்து வருகிறார். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், லின் வசிக்கும் குடியிருப்புக்கும், அவர் வேலைக்குச் செல்லும் அலுவலகத்திற்கும் இடையே 160 கி.மீ. தொலைவு உள்ளது. இதனால், வேலைக்குச் சென்று, திரும்ப அவர் தினமும் 320 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இப்படி, மனைவிக்காக அவர் தினமும் 320 கி.மீ. பயணிப்பதுதான் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதுபற்றி அந்நாட்டின் சமூக ஊடகத்தில் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கர்நாடகாவில் நிகழ்ந்த அதிசயம்| கொலையாளியை பிடிக்க 8 கிமீ தூரம் ஓடி மற்றொரு கொலையை தடுத்த மோப்ப நாய்!

லின் ஷு
‘எல்லா பெண்களும் என்னை விரும்புகிறார்கள்’ - விசித்திர காதல் நோய்.. பாதிப்புக்குள்ளான சீன இளைஞர்!

அதன்படி, தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கும் அவர், வெய்பாங்கில் உள்ள வீட்டில் இருந்து காலை 5.20 மணியளவில் புறப்படுகிறார். மின்சார பைக்கில் 30 நிமிட நேரம் பயணித்து ரயில் நிலையம் சென்றடைகிறார். இதன்பின்னர், காலை 6.15 மணியளவில் ரயிலில் ஏறும் அவர், குயிங்டாவோ நகருக்கு காலை 7.46 மணியளவில் சென்று சேர்கிறார். ரயிலில் இருந்து இறங்கி 15 நிமிடம் நடந்து அலுவலகம் சென்று சேர்கிறார். அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள கேண்டீனில் காலை சிற்றுண்டியை எடுத்துக்கொள்கிறார்.

அதன்பின்னர், காலை 9 மணிக்கு அவருடைய வேலையை தொடங்குகிறார். பணி முடிந்ததும், 3 முதல் 4 மணிநேரம் பயணம் செய்து வீட்டை அடைகிறார். அவருடைய இந்த நீண்ட தொலைவு பயணம் பற்றி அறிந்ததும், பயணத்திற்காக இவ்வளவு நேரம் செலவிடுகிறாரா என சமூக ஊடக பயனாளர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனால், புதிதாக திருமணம் முடித்த லின்னோ, ’’எல்லாம் மனைவி மீது கொண்ட காதலுக்காக’’ எனக் கூறும் அவர், ”இந்த நீண்ட பயணம் சலிப்பூட்டவில்லை. போக்குவரத்து வசதியும் உதவியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இவருடைய நிலைமையை அறிந்து, லின்னின் மேலாளரும் அவரை கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. எனினும், ”இது ஒரு தற்காலிக பயணம்” எனக் கூறும் லின், குயிங்டாவோவில் அவருடைய மனைவி வேலை தேடி வருகிறார் என்றும் வேலை கிடைத்ததும் அந்நகரிலேயே வசிக்க திட்டமிட்டு உள்ளோம் என்றும் தெரிவிக்கிறார். இந்த வீடியோவை 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டிருப்பதுடன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: இலங்கை டூர்| ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படாதது ஏன்? பின்னணியில் இருந்தது யார்?

லின் ஷு
”காதல் என்றபெயரில் என் மகனை ஏமாற்றியுள்ளார்”-மருமகள் மீது வீரமரணமடைந்த கேப்டனின் தந்தை குற்றச்சாட்டு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com