இதுவரை பார்த்திராத கோணத்தில் நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்க, புதிய காட்சி தளம் திறக்கப்படவுள்ளது.
ஈரி ஏரியில் இருந்து வழிந்தோடும் நீர், நயாகரா நதியாக பாய்ந்து பபலோ (Buffalo) என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியாக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் கொட்டுகிறது. அருவி வெள்ளமாக ஓடும் காட்சியை பார்க்கும்போது ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்படும். இதனைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் குவிகின்றனர்.
நீர்வீழ்ச்சியை படகில் சென்று பார்த்து ரசிக்கலாம். அதன் கரையோரத்திலிருந்தும் அருவியின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம். தற்போது நீர் வீழ்ச்சியின் அழகை கண்டு ரசிக்க புதிய காட்சித் தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டு பழமையான சுரங்கப்பாதை வழியாக சென்று, நயாகரா நீர்வீழ்ச்சியை இதுவரை பார்த்திராத கோணத்தில் காட்சியை கண்டு ரசிக்கலாம். நாளை (ஜூலை 1) முதல் இந்த புதிய காட்சித் தளம் திறக்கப்பட உள்ளது.