நாங்கள் தேடுபொறி நிறுவனம்; ஆகையால் விதிகளில் விலக்கு வேண்டும் - கூகுள் நிறுவனம்

நாங்கள் தேடுபொறி நிறுவனம்; ஆகையால் விதிகளில் விலக்கு வேண்டும் - கூகுள் நிறுவனம்
நாங்கள் தேடுபொறி நிறுவனம்; ஆகையால் விதிகளில் விலக்கு வேண்டும் - கூகுள் நிறுவனம்
Published on

சமூகவலைதளங்களை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு விதிகளை விதித்த நிலையில், தாங்கள் தேடு பொறிநிறுவனம் என்பதால், புதியதாக அமல்ப்படுத்தப்பட்ட விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இது குறித்து கூறிய கூகுள், “  நாங்கள் தேடு பொறி நிறுவனம்தான் சமூக வலைதளம் அல்ல. ஆகையால் புதிதாக  அமல்படுத்தப்பட்ட விதிகளில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது. இதனை கேட்ட நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் மின்னணு தகவல்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வந்தது. இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் தனிஉரிமை கொள்கையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், இதனால் கருத்து சுதந்திரமும் பாதிக்கப்படலாம் என கூறியது மட்டுமல்லாமல், இது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக ட்விட்டர் கூறியது. அதனைத்தொடர்ந்து புதிய சட்டங்களின்படி இந்தியாவில் எழும் புகார்களை கவனித்து நடவடிக்கை எடுப்பதற்காக இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரையும் டிவிட்டர் நியமித்துள்ளது.

அதே நேரம் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல், புகார்களை கையாளுவது, அரசின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றும்  புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளை நியமிப்பது குறித்து டிவிட்டரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com